” பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை குறைத்திடுக..” தவெக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்..!

vijay eps

எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தி உள்ளது.. உலகளாவிய எரிசக்தி விலை அதிகரித்து வருவதன் விளைவாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.103க்கு விற்பனை செய்யப்படுகிறது..


இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” வளைகுடா போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணம் காட்டி மத்திய எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையையும், வணிக எரிவாயு சிலிண்டர் விலையையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளையும் உயர்த்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை போக்கும் வகையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்து செயல்படுகிறதென்று சொல்கிறார்கள். பெட்ரோலுக்கும், டீசலுக்கும், எரிவாயு சிலிண்டருக்கும் உள்ள விற்பனை வரியை குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

RUPA

Next Post

இந்த ஆண்டில் தாக்க உள்ள 'சூப்பர் எல் நினோ..! இந்தியாவில் உள்ள இந்த நகரங்கள் பெரும் ஆபத்தில் உள்ளன.!

Fri May 15 , 2026
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் கவலையளிக்கும் வானிலை அறிகுறிகளில் ஒன்றைக் கொண்ட ஒரு பருவமழைக் காலத்தை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. ஏப்ரல் 13 அன்று வெளியிடப்பட்ட, இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) 2026 ஆம் ஆண்டுக்கான முதல் நீண்ட கால முன்னறிவிப்பு, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான நாட்டின் முதன்மை மழைக்காலமான தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு இயல்பை விடக் குறைவாகவோ அல்லது பற்றாக்குறையாகவோ இருக்க வாய்ப்புள்ளது என்று […]
el nino

You May Like