சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த இளம்பெண் பி.காம் படித்து முடித்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோஜ் செயலி மூலம் லிபின் ராஜ் என்ற இளைஞர் அறிமுகம் ஆகி உள்ளார். செல்போன் எண்ணை பறிமாறிக்கொண்டு முதலில் நண்பர்களாக பேசி வந்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை காதல் வலையில் சிக்க வைத்துள்ளார் லிபின் ராஜ்.
இருவரும் புகைப்படங்களை அனுப்பி, வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். அப்போது பெண்ணின் தனிப்ப்ட்ட புகைப்படங்களை இளைஞனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. 2 மாதங்கள் ஆன நிலையில் ஒரு நாள் திடீரென அந்த வாலிபர் இளம்பெண்ணுக்கு போன் செய்து மிரட்டியுள்ளான். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் இந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளான்.
இதன்படி சென்னை பெரியமேடில் உள்ள லாட்ஜுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண் லிபின் ராஜ் கூறியபடி லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்துள்ளார். அதன்பிறகு மீண்டும் மிரட்டி அதே பெரியமேடு லாட்ஜுக்கு வரவழைத்துள்ளார்.
இந்த நிலையில் தான் மீண்டும் 3-வது முறையாக இளம்பெண்ணை லாட்ஜுக்கு அழைத்துள்ளார். என் பாட்டி இறந்து 3 நாட்கள் தான் ஆகிறது. எனவே என்னால் வர முடியாது என அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞன் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை பெண்ணின் தாய்க்கு அனுப்பியுள்ளார். அதிர்ச்சி அடைந்த தாய் தனது மகளிடன் கேட்டபோது, நடந்ததை கூறினார்.
இதையடுத்து பெண்ணின் தாய் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மோசடி, பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லிபின் ராஜை கைது செய்தனர். விசாரணையில், லிபின் ராஜ் குமரியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் என்பது தெரியவந்தது.



