தெலுங்கானா மாநிலம் பூபால்பள்ளி மாவட்டத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிதலா கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (58), கவிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு வர்ஷினி, ஹன்சிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், ஹன்சிகா திருமணமாகி வெளியூரில் வசித்து வந்தார். வர்ஷினி பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் ஏற்பட்ட குமாரசாமி உடல்நலக்குறைவால் வீட்டிலேயே இருந்தார். இந்த நேரத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமாகாத ராஜ்குமாருடன் கவிதாவுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த குமாரசாமி இந்த உறவை கைவிடுமாறு மனைவியிடம் கூறி, தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, கணவரை கொல்ல திட்டமிட்டார் கவிதா.
கடந்த ஜூன் 25-ஆம் தேதி, ராஜ்குமாரை வீட்டிற்கு அழைத்து வந்த கவிதா, அவருடன் சேர்ந்து குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடி உடலை அடக்கம் செய்தனர். அதன் பிறகு ராஜ்குமார் வீட்டிற்கு அடிக்கடி வருவதை அறிந்த மகள் வர்ஷினி, தாயிடம் கேள்வி எழுப்பியதால், தனது ரகசிய உறவுக்கு இடையூறாக இருப்பார் எனக் கருதிய கவிதா, மகளையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
அதன்படி ஆகஸ்ட் 2-ஆம் தேதி, வர்ஷினியை கழுத்தை நெரித்து கொலை செய்து, சாக்கு மூட்டையில் கட்டி முள்புதரில் எறிந்தனர். பின்னர், மகள் காணாமல் போனதாக காவல்துறையில் புகார் செய்தார். ஆகஸ்ட் 25-ஆம் தேதி, வர்ஷினியின் உடலை மீண்டும் எடுத்த ராஜ்குமார், பைக்கில் கட்டாரம் தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு சென்று, அடக்கம் செய்து சடங்கு செய்துள்ளார். ஆனால் அருகில் ஆதார் அட்டை கிடைத்ததால் போலீசார் விசாரணை தொடங்கினர்.அப்போது ஆதார் கார்டை தெரியாமல் விட்டு சென்றுள்ளார்.
அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராஜ்குமார் கவிதா இருவரும் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின், கவிதா மற்றும் ராஜ்குமார் இருவரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணையில், இருவரும் கணவரையும் மகளையும் கொன்றது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read more: Instagram, YouTube உள்ளிட்ட 26 சமூக ஊடக செயலிகளுக்கு தடை.. அரசு அதிரடி அறிவிப்பு..!!