தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக கோவை சின்னக்கல்லாரில் 9 செமீ மழை பெய்துள்ளது. இதே போன்று கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம், விழுப்புரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை, திருவள்ளூர், தஞ்சை குமரி, நெல்லை, சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Read more: ஜூலை மாதம் மட்டும் 8 நாட்கள் ஸ்கூல் லீவு.. கூடவே உள்ளூர் விடுமுறை..!! எந்தெந்த தேதிகளில் தெரியுமா..?