தமிழகமே…! நாளை முதல் வடகிழக்குப் பருவமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

rain 2025 2

தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்: தென்மேற்குப் பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நாளை விலகக்கூடும். அதேநேரத்தில், வடகிழக்குப் பருவமழை தமிழகம்-புதுச்சேரி-காரைக்கால் பகுதிகள், கேரளா-மாஹே, தெற்கு உள் கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் நாளை தொடங்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்- பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இது மேற்கு- வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வரும் 19-ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள–கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பெரும் துயரம்!. தீப்பிடித்து எரிந்த பேருந்து!. உடல் கருகி 20 பேர் பலி!. பிரதமர் மோடி இரங்கல்!

Wed Oct 15 , 2025
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் 20 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் 57 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. நேற்று மதியம் 3 மணி அளவில் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். போக்ரான் எம்எல்ஏ பிரதாப் பூரி […]
rajasthan bus fire

You May Like