அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி செய்தி… ரூ.1000 உரிமைத் தொகை…! ஜூலை 15-ம் தேதி மறக்காதீங்க…

1000 2025 1

பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஜூலை 15-ம் தேதி முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நெசவாளர் காலனி மற்றும் சொக்கலிங்கபுரம் பகுதிகளில் வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஈடுபட்டார். அரசின் திட்டங்கள் முறையாக வந்து சேர்ந்துள்ளதா இந்த திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கவில்லை என கேட்டு அறிந்து திமுகவில் உறுப்பினர்களாக சேர விருப்பமா என கேட்டு அவர்கள் சம்மதத்துடன் திமுகவில் இணைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது பெண்கள் சிலர் எங்களுக்கும் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை என கோரிக்கை வைத்தனர். அதற்கு வருவாய்த்துறை அமைச்சர் 15-ம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடக்க இருக்கிறது. இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம், யார் யாருக்கு தகுதி இருக்கோ அவங்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். மேலும் தகுதி உள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை 10 முதல் 20 நாட்களில் வழங்கப்படும் என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார்.

விதிவிலக்கு

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூடுதலாக மூன்று விதிவிலக்குகளை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்ப பெண்களும், பிற ஓய்வூதத் திட்டங்களை ஓய்வூதியம் பெறுவோரும் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: மீண்டும் பரவும் நிபா வைரஸ்..கேரளாவில் 2 பேருக்கு பாதிப்பு உறுதி.. 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Vignesh

Next Post

அசத்தல்.. செயற்கை ரத்தத்தை உருவாக்கிய ஜப்பான்..! எல்லா ரத்த வகைக்கும் பொருந்தும்..

Sat Jul 5 , 2025
ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை ரத்தத்தை உருவாக்கி அசத்தி உள்ளனர். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு வகை செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். மருத்துவ உலகில் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. இது அனைத்து ரத்த வகைகளுடனும் பொருந்தும் என்பது தான் கூடுதல் சிறப்பு.. இந்த செயற்கை ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.. ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் புரதமான ஹீமோகுளோபின் மூலம் இந்த செயற்கை ரத்தம் உருவாக்கப்படுகிறது. […]
AA1HTJNy 1

You May Like