தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. இதனால் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கிவிட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் பலமுனை போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணி ஒருபக்கம் வலுவாக உள்ளது. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சியான அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.
அரசியலுக்கு புதிதாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனித்து களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. வழக்கம் போல சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவே அதிக சான்ஸ் உள்ளது. இப்படி பலமுனை போட்டி ஏற்படும் நிலை உள்ள நிலையில், தமிழகத்தில் மக்கள் மனநிலையைப் பற்றி இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் ஆகியவை இணைந்து Mood of the Nation என்ற தலைப்பில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
வாக்கு சதவீத நிலை: அதன்படி தமிழ்நாட்டில் இன்று தேர்தல் நடைபெற்றால் கூட திமுக கூட்டணியை மாபெரும் வெற்றி பெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக.1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்தியா டுடே – சி வோட்டர் கருத்துக்கணிப்பில் ஆட்சிக்கு எதிரான மனநிலையை கடந்து தமிழ்நாட்டில் உள்ள 36 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறுவதற்கான சூழல் நிலவுவதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. அதேநேரம் அதிமுக பாஜக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வைல் கார்ட் என்ட்ரி போல் அரசியலில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், அதிகளவில் இளைஞர்களை ஈர்த்தாலும், அது தேர்தலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. தவெக விஜய்யின் வருகை, திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளையே பிரிப்பார் என்றும், அதிமுகவுக்கே அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவார் என்றும் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நடந்தால் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரித்து, திமுக கூட்டணிக்கான வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று மக்களவையில் தேர்தல் நடந்தால் கூட மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 300க்கும் அதிகமான இடங்களை பெறும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: பருத்தி இறக்குமதிக்கு சுங்க வரி விலக்கு!. மத்திய அரசுக்கு திருப்பூர் பாராட்டு!.