பெண்கள் மத்தியில் தேம்பி தேம்பி அழுத வடகொரிய அதிபர்!… வைரலாகும் வீடியோ!

பெண்களிடம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து பேசிக் கொண்டிருக்கும் போதே மேடையில் வடகொரிய அதிபர் தேம்பி தேம்பி அழுத சம்பவம் வைரலாகி வருகிறது.

வட கொரியாவில் இன்டர்நெட் கிடையாது, பல வகையான தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது. ஒரே ஒரு அரசு தொலைக்காட்சி சேனல் மட்டும் தான் இருக்கும். அதிலும் நிதமும் அதிபரின் உரை தான் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கும். திரைப்படங்கள் எல்லாம் கிடையாது. அதுமட்டுமல்லாமல், அதிபரின் தந்தை இறந்த தினத்தை அந்நாடே துக்க தினமாக அனுசரிக்க வேண்டும். யாரும் சிரிக்கக்கூடாது. மறந்து சிரித்து மாட்டிக் கொண்டால், சிறைத்தண்டனை எல்லாம் கிடையாது. நேராக எமலோகத்திற்கு டிக்கெட் கொடுத்து விடுவார்கள். அப்படியொரு சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருபவர் தான் கிம் ஜாங் உன்.

இப்படி மிக கடுமையான சட்டத்திட்டங்களை கொண்ட வட கொரியா தற்போது ஒரு மிகப்பெரிய ஆபத்தை எதிர்கொண்டு இருக்கிறது. அதுதான் மக்கள்தொகை குறைவு. இந்தியா அதிக அளவிலான மக்கள் தொகையால் திணறிக் கொண்டிருக்கிறது என்றால், வட கொரியா குறைந்த அளவிலான மக்கள்தொகையால் கதறிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் சதவீதம் மிகக் குறைவான சதவீதத்தில் உள்ளது. அதேபோல, ஆண் பெண் மலட்டுத் தன்மையும் அங்கு அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலை இப்படியே நீடித்தால், எதிர்காலத்தில் வட கொரியா என்ற ஒரு நாடே இருக்காது என்கிற நிலைமை ஏற்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வட கொரியாவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் அதிபர் கிம்ஜாங் உன் உரையாற்றினார். அதில், நம் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் மோசமான அளவில் சரிவடைந்து வருகிறது. இது வட கொரியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. இதனை தடுத்து நிறுத்தும் வல்லமை நமது பெண்களுக்கு மட்டுமே உள்ளது. பெண்கள் அதிக அளவிலான குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும். தாய்மையின் பலத்தை நாம் காட்ட வேண்டும். அவர்களை சிறந்த குடிமக்களாக வளர்க்க வேண்டும் என பேசினார். அப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் கண்கலங்கினார். அதிபர் அழுவதை பார்த்த அங்கிருந்த பெண்களும், அதிகாரிகளும் அழுகை வருகிறதோ இல்லையோ, கத்தி ஒப்பாரி வைத்தனர்.

Kokila

Next Post

3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா...! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்...!

Fri Dec 8 , 2023
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதையடுத்து தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தனர். தற்போது நரேந்திர சிங் தோமர், ப்ரஹலாத் சிங் படேல், ரேனுகா சிங் ஆகியோரின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டார். இதன் காரணமாக மத்திய […]

You May Like