புதையலுக்காக தோண்டப்பட்ட கோயில் கருவறை..!! நேரில் பார்த்து ஷாக்கான பூசாரி..!! ஒன்று திரண்ட ஊர் மக்கள்..!! பரபரப்பு..!!

கர்நாடக மாநிலம் விஜயநகர், ஹோஷ்பேட் தாலுகாவில் உள்ள தர்மசாகர் கிராமத்தில் பீரப்பன் என்ற கோவில் உள்ளது. ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணையை ஒட்டிய பழமையான இந்த கோவிலுக்கு இன்று காலை பூசாரி வந்துள்ளார். அப்போது கோயிலின் கருவறை பகுதியின் முன்பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் கருவறை பகுதி 10 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டதை அறிந்ததும், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், புதையலுக்காக தோண்டப்பட்ட கோவில் கருவறை பகுதியில் எலுமிச்சை, குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் இருந்தன. இந்த கோவிலின் கருவறையில் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தோண்டியதில் மாந்திரீகம் நடந்தது தெரிய வந்தது. ஆனால், கோயிலின் கருவறையை தோண்டியபோது எதுவும் கிடைக்காததால் கோயிலின் முன்புறம் இருந்த கல்லை அகற்றி தேடினர். பீரப்பன் கோவிலில் புதையல் தேட வந்தவர்கள் உள்நாட்டவர்களா? அல்லது வெளிநாட்டவர்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பழமையான கோவிலை தோண்டி அழித்தவர்களை தண்டிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் விஜயநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ”நான் செய்தது தவறுதான்”..!! உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

Chella

Next Post

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

Fri Mar 22 , 2024
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை லேசான மழை பெய்யும். மேலும், […]

You May Like