நிர்வாணமாக கிடந்த நர்ஸ் உடல்! பைக்கில் அழைத்துச் சென்று கதையை முடித்த சக ஊழியர்! ராமநாதபுரத்தில் திடுக் சம்பவம்!

Crime 2026 1

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மனைவி உத்ரா வயது 26. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது. இவர்கள் திருப்பூர் பல்லகவுண்டன்பாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். ரஞ்சித்குமார் இறைச்சி கடையிலும், உத்ரா அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி முதல் நர்சாக பணியாற்றி வந்தார்.


மனைவியை தினமும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுவிட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருவது ரஞ்சித்குமாரின் வழக்கம். கடந்த 14ம் தேதி மாலையும் ரஞ்சித்குமார் தனது மனைவியை அழைத்துச்செல்வதற்காக மருத்துவமனைக்கு சென்றார். ஆனால் அங்கு உத்ரா இல்லை; பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக ஊத்துக்குளி போலீஸ் நிலையத்தில் உத்ரா மாயமானதாக புகார் அளித்தனர்.

இதற்கிடையே கடந்த 17ம் தேதி விஜயமங்கலம்–பெருந்துறை சாலையில் உள்ள பொன் நகர் பகுதியில், ஒரு புதருக்கு அருகே நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், சடலமாக கிடந்தது உத்ரா என்பது உறுதி செய்யப்பட்டது. உத்ராவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் உத்ராவின் செல்போன் அழைப்புகள், மருத்துவமனை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். உத்ராவுடன் வேலை பார்த்த சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 14ம் தேதி மாலை பணி முடிந்து வீடு திரும்ப தயாரான உத்ராவை, தான் வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி தனது டூவீலரில் சரவணன் அழைத்துச்சென்றுள்ளார்.

பின்னர் விஜயமங்கலம்–பெருந்துறை சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார். கீழே இறங்கி வந்த உத்ராவை, துப்பட்டாவை வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். சரிந்து விழுந்த உத்ரா கழுத்தி கிடந்த 4.5 சவரன் தாலிச்சங்கிலியை திருடிவிட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கிவிட்டு தப்பிச்சென்றது விசாரணையில் தெரியவந்தது. சரவணனை கைது செய்த பெருந்துறை போலீசார், 4.5 சவரன் நகையை மீட்டனர்.

Read More : இன்று முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும்! சென்னைக்கு ஆபத்தா? வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சொன்ன முக்கிய தகவல்!

Next Post

அக். 23ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி! புயலாக மாறுமா? அதி கனமழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!

Tue Oct 20 , 2026
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக். 15 முதல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை உள்ளிட்ட கடலோர மற்றும் உள் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை கொட்டித் தீர்த்து வருகிறது. பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதற்கிடையே, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் ஆகிய இரு பெருங்கடல் பரப்புகளிலும் […]
cyclone n

You May Like