ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று தவெக ஆதவ் அர்ஜுனா பதிவிட்டத்ஸ்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இச்சம்பவம் திட்டமிட்ட சதி என்று தவெகவினர் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.
அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்! என்று தெரிவித்துள்ளார். அந்த பதிவு வைரலான சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் தள பக்கத்தில் பதிவை நீக்கியுள்ளார்.
Read more: அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடையை மூட உத்தரவு…!