நர்சிங் மாணவியை கடத்தி திருமணம் செய்த டுபாக்கூர் சாமியார்.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த முதல் மனைவி..! பரபரத்த திருப்பத்தூர்..

thirupattur samiyar

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த உமையப்ப நாயக்கனூர் பகுதியில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ்–கவிதா தம்பதியரின் இரண்டாவது மகளான காயத்ரி (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென சுயநினைவு இழந்து, கை–கால் செயலிழந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்தார்.


அப்போது அக்கம் பக்கத்தினரின் ஆலோசனையை நம்பிய பெற்றோர், மகளை கல்லரப்பட்டி–கோமலேரி கொட்டாய் பகுதியில் உள்ள மகா காளியம்மன் கோயில்க்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திய சுப்பிரமணி என்பவர் “பில்லி சூனியம் வைத்திருக்கிறார்கள். இதை நீக்க மகளை கோயிலில் தங்க வைக்குமாறு கூறியுள்ளார்

அதை கேட்டு பெற்றோரும் இரண்டு வாரங்கல் கோயிலில் தங்க வைத்துள்ளனர். ஆனால் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் பின்னர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின் காயத்ரி குணமடைந்ததாக கூறப்படுகிறது. காயத்ரி தற்போது வாணியம்பாடி அருகே உள்ள அர் ரஹ்மான் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வருகிரார்.

கடந்த 22ஆம் தேதி கல்லூரி முடித்து வீடு திரும்புவதாக பெற்றோரிடம் தெரிவித்த காயத்ரி, அதன்பிறகு காணாமல் போனார். பல இடங்களில் தேடிய பெற்றோருக்கு, இரவு நேரத்தில் சாமியார் சுப்பிரமணியிடமிருந்து ஒரு அதிர்ச்சி அழைப்பு வந்துள்ளது. அதில், “உங்கள் மகளை நான் திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் திருப்பதி செல்கிறோம்” என கூறி போனை துண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கோயில் பகுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது சுப்பிரமணியின் குடும்பத்தினர் “கனவில் மிரட்டல் வந்ததால், மகளை திருமணம் செய்து வைத்தோம்” என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில், சுப்பிரமணி மற்றும் அவரது இரண்டாவது மனைவி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பின்னர் போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில், காயத்ரி பயிற்சி முடித்து வெளியே வந்தபோது அவரை காரில் கடத்திச் சென்றதாகவும், “குடும்பத்தை சூனியம் செய்வேன்” என மிரட்டி திருமணம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்“சூனியம் செய்து குடும்பத்தை அழிப்பேன் என்று மிரட்டியதால் பயந்து சென்றேன். அதன் பிறகு நடந்த சில விஷயங்கள் எனக்கு தெளிவாக நினைவில் இல்லை. என்னை மீட்டு பெற்றோரிடம் அனுப்பி வைக்க வேண்டும்” என வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து காயத்ரி பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுப்பிரமணி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Read more: மாடிப்படி ஏறும்போது முழங்கால் வலியா..? அசால்டா விட்டா ஆபத்து..! எச்சரிக்கும் மருத்துவர்கள்..

English Summary

The priest from Dupakkur who kidnapped and married a nursing student.. The first wife he gave a sketch to..! Tirupathur is a disaster..

Next Post

மனைவியுடன் தகராறு.. மாமியார் டார்ச்சர்.. 30 வயது நீதிபதி தூக்கிட்டு தற்கொலை..! என்ன நடந்தது..?

Sun May 3 , 2026
'Having Conflicts With Wife': Family Of Delhi Judge Who Died By Suicide Alleges 'Harassment' By In-Laws
delhicourt1 1777738699

You May Like