டெல்லியில் படுக்கை வசதி கொண்ட பேருந்தில் பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகிய இருவரையும் டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
டெல்லியின் ராணி பாக் பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிதாம்புரா குடிசைப் பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். வழக்கம்போல் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
தகவலின்படி, சரஸ்வதி விஹார் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஓட்டுநரிடம், அந்த பெண் நேரம் கேட்டுள்ளார். சுற்றி யாரும் இல்லாததை பார்த்த ஓட்டுநர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துக்குள் இழுத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பேருந்து நங்லோய் நோக்கி இயக்கப்பட்ட நிலையில், ஓட்டுநர் மற்றும் நடந்துனர் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பிறகு ரத்த வெள்ளத்தில் துடித்த பெண்ணை வெளியே வீசிவிட்டு சென்றுள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவ பரிசோதனையில் அந்த பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி ஆனது. பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பேருந்தை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. ஓடும் பேருந்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மே மாத மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 விரைவில் வரவு வைக்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு..!



