அதிரடி..! இன்று முதல்”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்…! நவம்பர் வரை தொடர்ச்சியாக 10,000 முகாம்கள்…!

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மனு கொடுக்கப்பட்ட 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வருவாய் துறை செயலர் தெரிவித்துள்ளார் .


இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை செயலர் அமுதா; தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்படுகிறது. இத்திட்டம் மூலம் நகர்ப்புறத்தில் 13 துறைகள் மூலமாக 43 சேவைகளும், ஊரக பகுதிகளில் 15 துறைகள் மூலமாக 46 சேவைகளும் வழங்கப்படும். இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கும் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 கவுன்ட்டர்கள், இதர துறைகளுக்கு 13 கவுன்ட்டர்கள், இ-சேவை, ஆதார் அட்டை மாற்றத்துக்கு 2 கவுன்ட்டர்கள் உள்ளன. இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சேவைகளுக்கு ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த முகாம்களில் அந்த சேவையை பெற ரூ.30 கட்டணமாக செலுத்தினால் போதும்.

இன்று தொடங்கி வாரம்தோறும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய 4 நாட்கள் முகாம் நடைபெறும். இதுபோல நவம்பர் வரை தொடர்ச்சியாக 10,000 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. முகாம் நடைபெறும் இடம், நாட்கள் விவரம் இதில் உள்ளது. மக்கள் தங்கள் பகுதிகளில் எப்போது முகாம் நடைபெறுகிறது என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

முதல்வர் தனி பிரிவில் (‘சிஎம் செல்’) பெறப்படும் மனுக்கள், அவரது பயணத்தின்போது மக்கள் தரும் மனுக்கள், அழைப்பு மையத்தில் பெறப்படும் கோரிக்கைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து தீர்வு காணும் நோக்கில் ‘முதல்வரின் முகவரி துறை’ கடந்த 2021 நவம்பரில் தொடங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 1.05 கோடி மனுக்கள் பெறப்பட்டு, கடந்த ஜூன் 30 வரை 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தில் நகர பகுதிகளில் 9.05 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.

Read more: இன்று உலக மக்கள் தொகை தினம்!. 2030க்குள் இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறும்!. இந்த மாநிலம்தான் முதலிடம்!.

Vignesh

Next Post

இந்த கோவிலில் மனிதர்கள் இரவில் தங்கினால் கல்லாக மாறிவிடுவார்களாம்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Tue Jul 15 , 2025
இந்தியாவில் உள்ள பல வினோத கோவில்களில் ஒன்று தான் ராஜஸ்தானில் உள்ள கிராடு கோவில். இங்கு சிவனுக்கென்று ஐந்து கோவில்கள் உள்ளன. இந்தியாவின் சபிக்கப்பட்ட கோவில் என்றே இக்கோவில் குறிப்பிடப்படுகிறது. இந்த கோவிலின் சாபம் உண்மை தானா என்பதை ஆராய்ச்சி செய்யவும் இதுவரை யாரும் முன்வரவில்லை. இந்தியாவில் எத்தனையோ பழங்கால கோவில்கள் உள்ளன. இவற்றில் எதன் வரலாற்றை எடுத்துக் கொண்டாலும் அதற்கு பின்னால் வரமோ, சாபமோ, பயங்கரமான கதையோ இல்லாமல் […]
temple 1

You May Like