அரசுப் பள்ளிகளில் ஜூலை 25-ம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு..!

tn school 2025

அரசுப் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டத்தை ஜூலை 25-ம் தேதி நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ; அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் (எஸ்எம்சி) கூட்டம் கடந்த அக்டோபர் முதல் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில், இக்கூட்டத்தை மாதம்தோறும் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டின் முதல் எஸ்எம்சி குழு கூட்டம் ஜூலை 25-ம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை நடக்க உள்ளது.

இதில் பள்ளிகள், மாணவர்களின் வளர்ச்சிக்கு தேவையான அம்சங்களை தீர்மானமாக நிறைவேற்றிக் கொள்ளலாம். ஸ்லாஸ் தேர்வு, திறன் இயக்க பயிற்சி, எண்ணும், எழுத்தும், இல்லம் தேடி கல்வி, உயர் கல்வி வழிகாட்டி, இடை நிற்றல் கணக்கெடுப்பு உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும். அதற்காக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எஸ்எம்சி கூட்டத்தை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

80,000 நிர்வாண படங்கள்!. ஆபாச வீடியோ மூலம் புத்த துறவிகளை மிரட்டி ரூ.100 கோடி வரை சம்பாதித்த பெண்!. அலறும் தாய்லாந்து!

Sat Jul 19 , 2025
தாய்லாந்தில் ஒரு பெரிய பாலியல் மற்றும் மிரட்டல் ஊழல் வெளிவந்துள்ளது, இதில் விலாவன் எம்சாவத் என்ற பெண் பல மூத்த புத்த துறவிகளை தனது வலையில் சிக்க வைத்துள்ளார். அவர் துறவிகளுடன் உடலுறவு கொண்டதாகவும், பின்னர் தனிப்பட்ட வீடியோக்களைக் காட்டி அவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்து பெரும் தொகையை மிரட்டி பணம் பறித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். விலாவன் அம்சவத் யார்? விலாவன் அம்சவத் என்ற 30 வயது பெண், பாங்காக்கிற்கு […]
thailand Wilawan Emsawat 11zon

You May Like