வீர, தீர செயல்களுக்கான தமிழக அரசு வழங்கும் விருது…! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!

Tn Govt 2025

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்க இன்று என தமிழக அரசு அறிவித்துள்ளது.


வீர, தீர செயல்களுக்கான ‘அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் (சீருடைப் பணியாளர்கள் உட்பட) இந்த பதக்கங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர் தமிழகத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டியது அவசியம். வயது வரம்பு கிடையாது.

2026-ம் ஆண்டுக்கான ‘வீர தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம்’ விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் பரிந்துரைகள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே பெறப்படும். இந்த இணையதளத்தில் அதற்கென உள்ள படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை உள்ளடக்கியதாகவும், விருதுக்காக பரிந்துரைக்கப்படும் நபர்களின் வீர தீர செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் தகுதியுரை (அதிகபட்சம் 800 வார்த்தைகளுக்கு மிகாமல்) தெளிவாகவும், தேவையான அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இணையதளத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். தகுதியுடையோர் அரசால் நியமிக்கப்படும் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

"நலம் காக்கும் ஸ்டாலின்" முகாம்..! பொதுமக்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு அட்டை...! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!

Mon Dec 15 , 2025
தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2025 வரை வட்டாரத்திற்கு 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 02.08.2025 […]
44421710 chennai 01 1

You May Like