“அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள்..” சிபிஐ விசாரணைக்கு நன்றி தெரிவித்த நயினார் நாகேந்திரன்..

karur nainaar

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த தீர்ப்புக்கு தவெகவினர், அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில் பாஜக இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது.


தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய கரூர் துயரத்தின் பின்னணியை சிபிஐ தான் விசாரிக்க வேண்டுமென்ற நமது வலுவான கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் வகையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு. அஜய் ரஸ்தோகி அவர்கள் தலைமையில் கண்காணிப்புப் குழுவையும் அமைத்துள்ள நமது மாண்பமை உச்சநீதிமன்றத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கரூர் சம்பவத்தில் தங்கள் மீது எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நிறுவ, எதிர்தரப்பினரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தங்கள் இஷ்டத்திற்குக் கட்டுக்கதைகளைப் புனைந்து வந்த திமுக அரசின் அவசரத்திற்குப் பின்னால் ஏதோவொரு அருவருப்பான அரசியல் காரணம் ஒளிந்துள்ளது என்ற மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப்போகிறது. தங்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் கருணையின்றி தண்டிக்கப்படுவார்கள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : “இது இடைக்கால உத்தரவு தான்.. மோசடி வழக்கு என்பது உறுதியானால் தீர்ப்பே ரத்தாகும்..” திமுக எம்.பி. வில்சன் பரபரப்பு தகவல்..

RUPA

Next Post

உங்க சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்க இந்த இரண்டு பொருள் போதும்..!! ட்ரை பண்ணி பாருங்க..

Mon Oct 13 , 2025
Not groundnut flour.. if you mix this with yogurt and apply it on your face.. your face will glow in a few minutes..!!
Face 2025

You May Like