உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், நடந்த ஒரு காதல்-கொலை வழக்கு தற்போது போலீசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பம்ராலி கட்டாரா பகுதியைச் சேர்ந்த பாப்லி, முதலில் தனது கணவர் ஹரியோமை கொன்ற குற்றத்தில் சிறையில் இருந்தவர். அந்த வழக்கில் அவர் 5½ ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார்.
சிறை வாழ்க்கையின் போது, பாப்லி பிரேம் சிங் என்ற கைதியை சந்தித்தார். அவர்களுக்கிடையில் காதல் மலர்ந்தது. பிரேம் சிங், பாப்லிக்கு ஆதரவாக நின்றதோடு, ஜாமீனில் வெளியே வரவும் உதவினார். சிறையில் இருந்து வெளிவந்த பாப்லி, பிரேம் சிங்குடன் பாட்ஷாஹி அரண்மனை பகுதியில் வசிக்கத் தொடங்கினார். ஆனால் பாப்லியின் மாமனார் ராஜ்வீர், இந்த உறவை கடுமையாக எதிர்த்தார்.
இதனால், பாப்லி மற்றும் பிரேம் சிங், ராஜ்வீரை கொலை செய்ய முடிவு செய்தனர். புதன்கிழமை இரவு, பாப்லி தனது மாமனாரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்து தினை வயலுக்கு அழைத்து சென்று, பிரேம் சிங்குடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, உடலை அங்கேவே போட்டுவிட்டு தப்பினர்.
அடுத்த நாள், கனவரை காணவில்லை என பாப்லியின் மாமியார் முன்னி தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆதாரங்களை சேகரித்தனர். தற்போது பாப்லியும் பிரேம் சிங்கும் தலைமறைவாக உள்ளனர். ஆக்ரா போலீஸ் அதிகாரி ஹரிஷ் சர்மா, இருவரையும் தேடி விரிவான சோதனைகள் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
Read more: வெஸ்டர்ன் டாய்லெட் Flush-ல் இரண்டு பட்டன்கள் இருப்பது ஏன் தெரியுமா..? பலருக்கும் தெரியாத தகவல்.