’இதுக்கு ஒரு முடிவே இல்லையா’..? மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! இன்னைக்கு எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 6,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. அவ்வப்போது கிராமுக்கு ரூ.10 அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்து வந்தாலும், உயரும் போது 50 முதல் 100 ரூபாய் வரையிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு நேற்று 6,200 ரூபாயாக இருந்தது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.49,600 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து, 6,215 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 120 ரூபாய் உயர்ந்து, 49 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்தால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50,000 ரூபாயை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சில்லறை விற்பனையில் நேற்று 80 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையான நிலையில், வெள்ளியின் விலை, இன்று 30 பைசா குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 20 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார்வெள்ளி 300 ரூபாய் குறைந்து ரூ.80,200 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More : ’அன்னைக்கு அந்த கதறு கதறுனாரே’..!! திடீரென மாறிய துரை வைகோ..!! பம்பரம் சின்னத்துக்கு டாட்டா..!!

Chella

Next Post

Lok Sabha | வாக்கு சேகரிக்க வந்த தமிழச்சி தங்கபாண்டியனை விரட்டியடித்த பொதுமக்கள்..!! ஏன் தெரியுமா..?

Wed Mar 27 , 2024
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் அத்தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி மயிலாப்பூர் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்றபோது, பொதுமக்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய விடாமல், திருப்பி அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, பாரதிதாசன் நகர் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சேதம் அடைந்திருப்பதாகவும், நீண்ட நாட்களாக சீர் செய்யக்கோரி கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய பொதுமக்கள், […]

You May Like