பட்டாசு வெடிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…! பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு..!

tn gov diwali

பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து பொது சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; பொதுமக்கள் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாட பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. அதன்படி, பட்டாசு வெடிக்கும்போது குழந்தைகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். திறந்த வெளியில் பட்டாசு வெடிக்க வேண்டும். சுவாசப் பிரச்சினை உடையவர்கள் பொதுவெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது தண்ணீர் வாளிகள் மற்றும் போர்வையை தயாராக வைத்திருக்க வேண்டும்.

பட்டாசுகளை பயன்படுத்திய பின்னர் அதை தண்ணீர் வாளியில் போட்டு அப்புறப்படுத்த வேண்டும். செருப்பு அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடித்த பின்னர் கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவ வேண்டும். எரியும் மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளை சுற்றி பட்டாசு பெட்டிகளை வைக்கக்கூடாது. மின்கம்பங்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. இந்த நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற மாவட்ட சுகாதார அதிகாரிகள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகையின்போது, தீ விபத்துகளால் காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், தீக்காய சிகிச்சை அளிப்பதற்கான அத்தியாவசிய மருந்துகள் இருப்பதை சுகாதார அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.பெரிய காயங்கள் ஏற்பட்டால், முதலுதவி சிகிச்சை அளித்து மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி, மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். போதிய அளவு ரத்தம் கையிருப்பில் இருப்பதுடன், அவசர காலத்தை கையாளும் வகையில், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.

மாநில அவசரகால செயல்பாட்டு மையம், 94443 40496, 87544 48477 ஆகியவற்றில் தகவல் அளிப்பது அவசியம். அத்துடன், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், டாக்டர்கள் அழைத்தவுடன் பணிக்கு வரும் வகையில் அருகில் இருக்க வேண்டும். அதேபோல், 424 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும்

Vignesh

Next Post

உங்க தண்ணீர் தொட்டி பல வருஷத்துக்கு அழுக்காகாது!. இதை வச்சு சுத்தம் பண்ணுங்க!.

Sun Oct 19 , 2025
பொதுவாக தண்ணீர் தொட்டி என்று அழைக்கப்படும் இந்த தண்ணீர் சேமிப்பு தொட்டி, ஒரு வீட்டின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். அதன் தூய்மையைப் பராமரிப்பது சமமாக முக்கியமானது. தொடர்ந்து தண்ணீர் தேங்குவதால், அது விரைவாக அழுக்காகிவிடும். சிறிதளவு மாசுபாடு கூட முழு குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. அதில் ஆபத்தான கொசுக்கள் மற்றும் பூச்சிகள் பெருகும் அபாயமும் உள்ளது. இருப்பினும், அதை சுத்தம் செய்வது ஒரு சவாலை ஏற்படுத்துகிறது. தண்ணீர் […]
water tank cleaning

You May Like