உள்ளூர் காவல்துறை உதவியுடன் 3 மாதங்களுக்கு ஒருமுறை கல்லூரிகளில் ஆய்வு நடத்துவது கட்டாயம்…!

College students 2025

உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தொழில்நுட்பக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக்கல்வி ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில்: கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்கு பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளின் வளாகங்களில் மாணவர் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்.

வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பயிற்சி பெற்ற பாதுகாப்புபணியாளர்களை அமர்த்துதல் போன்ற அரசு உத்தரவை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். உள்ளூர் காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் வளாகபாதுகாப்பு தணிக்கை 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அறிக்கையைதங்கள் கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நாடு முழுவதும் 5,17,040 வக்ஃப் சொத்துக்கள் பதிவேற்றம்...! மத்திய அரசு தகவல்...!

Mon Dec 8 , 2025
வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நிறைவடைந்தது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வக்ஃப் சொத்து விவரங்களைப் பதிவு செய்து நிர்வகிப்பதற்காக உமீத் என்ற தளம் 2025 ஜூன் 6 அன்று தொடங்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தெளிவான வழிகாட்டுதல்களின்படி 6 மாத கால அவகாசம் நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 6, 2025 அன்று பதிவு செய்வதற்கான கெடு நிறைவடைந்தது.காலக்கெடு நிறைவடையும் இறுதி நாட்களில் பதிவுகள் கணிசமாக அதிகரித்தது. பல மறுஆய்வுக் […]
waqf board 2025

You May Like