எஸ்ஐஆர் (SIR) தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் கூட்டத்தில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதியும் வழக்கறிஞர் இளங்கோவும் பங்கேற்றனர்.
அதே நேரத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த கூட்டத்திற்கு 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் தமாகா, அமமுக, நாதக, பாமக, தவெக உள்ளிட்ட 20 கட்சிகள் புறக்கணித்தன. கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது: “எஸ்ஐஆர் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராதவர்கள் கோழைகள்.
வந்தவர்கள் பெருந்தன்மையோடு வந்திருக்கிறார்கள். ஜனநாயக உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பயந்தாங்கொள்ளிகள் வரவில்லை; வீரர்கள் வந்தார்கள்.” என்றார். மேலும் அவர் கூறுகையில், “எஸ்ஐஆர் மட்டும் அல்ல, என்ஆர்சியும் குடியுரிமைச் சட்டமும் மக்களின் உரிமையை பறிக்கும் சதி. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நேரத்தில் இதை அவசரமாக அமல்படுத்துவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
Read more: நேரடி சனி பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா..?



