விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்த நண்பர்கள் பயணித்த கார் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சென்டர் மீடியனை மோதியது. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், காரில் இருந்தவர்கள் தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், கார் உடனடியாக தீப்பற்றியதால், உள்ளே இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தீக்கு இறையாகினர்.
உயிரிழந்தவ்ர்கள் சென்னையைச் சேர்ந்த சம்சுதீன் (25), கொளத்தூர் ரிஷி மற்றும் ஆவடி மோகன் என்பது தெரியவந்தது. மேலும் இருவர் தீ காயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரவு அல்லது அதிகாலை நேரங்களில் தூக்கமின்மை காரணமாக வாகனம் ஓட்டுவது உயிருக்கு மிக பெரிய அபாயம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
Read more: காந்திக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அதிகாரப்பூர்வமாக கிடைத்ததா?சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?