Rain: இன்று இடி, மின்னலுடன் கூடிய மழை…! சென்னை வானிலை மையம் எச்சரிக்கை…!

Thunder Rain 2025

இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 7 முதல் 11-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

கர்ப்பிணிகள் சிக்கன் சாப்பிட்டால் நல்லது தான்.. ஆனால் இவர்களெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்..!!

Sun Jul 6 , 2025
கர்ப்ப காலத்தில் சிக்கன் சாப்பிட பலர் பயப்படுகிறார்கள். சிக்கன் சாப்பிட்டால் சூடு பிடிக்கும்.. அல்லது வேறு ஏதாவது நடக்கும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் உள்ளது. ஆனால் நிபுணர்கள் சிக்கன் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது என்று கூறுகிறார்கள். அதை எப்படி சாப்பிடுவது நல்லது என்பதை இங்கே பார்ப்போம். கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், பலர் கர்ப்ப காலத்தில் சிக்கன் […]
pregnant women eat chicken What do doctors say 1 jpg 1

You May Like