தமிழகத்தில் பரவும் உண்ணி காய்ச்சல்..!! அறிகுறிகள் எப்படி இருக்கும்..? பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Tick ​​Fever 2026

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை தொடர்ந்து ‘ஸ்க்ரப் டைபஸ்’ (Scrub Typhus) எனப்படும் ‘உண்ணி காய்ச்சல்’ பாதிப்பு மக்களிடையே பரவலாக அதிகரித்து வருவதாக தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் எச்சரித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், பருவமழை மாற்றங்களால் பல்வேறு வகையான வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தீவிரமடைந்து வருகின்றன. இதில் ‘ஓரியண்டியா சுட்சுகாமுஷி’ (Orientia tsutsugamushi) என்ற பாக்டீரியா தொற்று மூலமாக இந்த உண்ணி காய்ச்சல் பரவுகிறது. முற்காலத்தில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் மட்டுமே காணப்பட்ட இந்த ஒட்டுண்ணி வகை பாக்டீரியாக்கள், தற்போது ஏற்பட்டுள்ள தீவிரப் பருவநிலை மாற்றம் காரணமாக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலுள்ள புல்வெளிகள், புதர்கள் மற்றும் செடி கொடிகளிலும் பரவி வாழத் தொடங்கியுள்ளன.

ஆகஸ்ட் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை இந்த வகை உண்ணி காய்ச்சலின் பரவல் தீவிரமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தீவிர உடல்வலி, அதீத சோர்வு, பசியின்மை போன்ற ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தென்படும். இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும், பொதுமக்கள் சுய மருத்துவம் செய்துகொள்வதைத் தவிர்த்து உடனடியாகத் தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

உண்ணி காய்ச்சல் தொடர்பாகப் பொதுமக்கள் தேவையின்றி அச்சமடைய வேண்டாம் எனவும், புல் மற்றும் புதர்கள் மண்டிய பகுதிகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு போதிய தற்காப்பு நடவடிக்கைகளுடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமா..? என்ன செய்ய வேண்டும்..? அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி..!!

Next Post

CM விஜய் லண்டன் போனதே வேஸ்ட்..!! 100/100 இது நடக்கும்..!! We The Leaders நிறுவனர் அண்ணாமலை அதிரடி..!!

Sun Sep 20 , 2026
தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் முதல்வர் விஜய் லண்டனுக்குப் படை திரட்டிச் சென்றிருப்பது காலாவதியான பழைய அரசியல் பாணி என்றும், லண்டன் பொருளாதாரமே தள்ளாடும் நிலையில் அங்கே போய் எதை ஈர்க்க முடியும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது இயக்கம் மிக விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக வடிவெடுக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஒரு கூட்டத்தையே லண்டனுக்கு […]
vijay annamalai e1789901048739

You May Like