தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்
மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைக்கு கொண்டு வர திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் மு,க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரை மீண்டும் சட்டப்பேரவைக்கு அழைத்து வருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது 7 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் திருச்சி கிழக்கில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அந்த தொகுதிக்கும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் களமிறங்குவாரா? எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதிகள் அனைத்தும் அதிமுகவிற்கு செல்வாக்கான இடங்கள். இதனால் திமுக தயங்குகிறது.
திமுகவின் பலம் கொண்ட தொகுதிகளில் ஒன்றான திருவாரூர் தற்போது அதிகம் பேசப்படும் தொகுதியாக மாறியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசியல் பயணத்துடன் நெருங்கிய தொடர்புடைய இந்த தொகுதியில் தற்போது திமுகவைச் சேர்ந்த பூண்டி கலைவாணன் எம்எல்ஏவாக உள்ளார். அவர் பதவி விலகினால், நடைபெறும் இடைத்தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி நீண்ட காலமாக திமுகவின் வலுவான ஆதரவு பெற்ற பகுதியாக இருந்து வருகிறது. 1996 முதல் நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்று வருகிறது. கருணாநிதியும் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் இதே தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார். 2019 இடைத்தேர்தலுக்குப் பிறகு பூண்டி கலைவாணன் தொடர்ந்து 2021 மற்றும் 2026 தேர்தல்களிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ளார்.2026 தேர்தலில் பூண்டி கலைவாணன் சுமார் 93 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று, தனது போட்டி வேட்பாளரை18 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனால், இந்த தொகுதி திமுகவுக்கு பாதுகாப்பான தொகுதியாக பார்க்கப்படுகிறது. .அதுமட்டுமன்றி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய பூண்டி கலைவாணன் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
AlsoRead:“என்னால பொண்டாட்டி டார்ச்சல் தாங்க முடியல” மனைவியால் 27 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!



