TNPSC புதிய அப்டேட்…! வரும் 12-ம் தேதி தேர்வு…! ஹால் டிக்கெட் வெளியீடு…! முழு விவரம் இதோ…

மருத்துவத்துறையில் தொழில் ஆலோசகர் பதவி, குடிசை மாற்று வாரிய சமூக ஆர்வலர் பதவிக்கான எழுத்துத்தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டுப்பணியில் அடங்கிய சமூக ஆர்வலர் ஆகியப்பதவிகளுக்கான கம்ப்யூட்டர் மூலம் தேர்வு வரும் 12-ம் தேதி காலை, மாலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் மட்டும் நடைபெறுகிறது.


தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒருமுறை பதிவேற்றம் மூலமாக விண்ணப்ப எண், பிறந்ததேதியைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து காெள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

எடப்பாடி ஆதரவாளர்கள் பா.ஜ.க-வில் இணைத் திட்டம்...! ரகசியத்தை உடைத்த புகழேந்தி....!

Sat Nov 5 , 2022
எடப்பாடி ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள் என புகழேந்தி தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான புகழேந்தி; அதிமுகவின் பொது செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாருக்கும் கிடையாது. எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அவர்களின் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. தங்கமணி திருந்த வேண்டும் இல்லையென்றால் களத்தில் இறங்க வேண்டி […]
IMG 20221105 060119

You May Like