மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பரவல்…….! கோவை தொழிலில் நிறுவனங்களில் நோய் தொற்று தடுப்பு பணிகள் தீவிரம்…..!

கோயமுத்தூர் மாவட்டத்தில் உற்பத்தி துறையின் கீழ் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்த தொழில் நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் என்று ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களை சார்ந்த 8 லட்சம் தொழிலாளர்கள் இங்கே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலை எல்லாம் மறுபடியும் நோய் தொற்று பரவல் ஆரம்பிக்க தொடங்கி இருக்கிறது. தொழில் துறையினர் இடையே இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோவை சிட்கோ தொழில் பேட்டை உற்பத்தியாளர் நல சங்க தலைவர் நல்லதம்பி தெரிவித்ததாவது 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் தொழில் நிறுவனங்கள் மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கி இருக்கின்றன. ஆனால் தற்சமயம் மறுபடியும் நோய் தொற்று பரவல் ஆரம்பித்ததால் தொழில் முனைவோர் இடையே கவலை ஏற்பட்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனாலும் அனைத்து விதத்திலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தொழில் நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டனர். நாள்தோறும் தொழிலாளர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவை பின்பற்றப்படுகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சங்க துணை தலைவர் சுருளி வேல் தெரிவித்ததாவது, ஒன்றரை வருடங்களுக்கு மேல் நிலவி வந்த மூலப் பொருட்கள் விலை உயர்வு போன்ற பல பிரச்சனைகளுக்கு பின்னர் தற்போது தான் மெல்ல இயல்பு நிலை நோக்கி தொழில் நிறுவனங்கள் திரும்பத் தொடங்கி இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

நாள்தோறும் தொழிலாளர்களின் உடல் வெப்பம் மட்டும் அல்லாமல் ஆக்சிஜன் அளவு, முகக்கவசம், கட்டாயம் அணிதல், பணி புரியும்போதும், உணவு இடைவேளை, டீ இடைவேளை போன்ற நேரத்திலும் கேண்டின் போன்ற பகுதிகளிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

Next Post

ஏப்ரல் 5ம் தேதி முதல் அதிமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும்…..! பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் முதல் அறிக்கை……!

Tue Mar 28 , 2023
அதிமுகவின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர் தன்னுடைய முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாக அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் 5 வருடங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தினர். உரிமை சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்டதிட்ட விதிமுறைகளின் படி […]

You May Like