100 நாள் வேலை திட்டம்…..! நீதிமன்றம் அரசுக்கு விதித்த அதிரடி உத்தரவு…..!

தென்காசி மாவட்டத்தை சார்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஒரு மனதில் தருகாபுரம் கிராம ஊராட்சியில் கண்மாய் நிலமான இரு கரையான் பகுதியில் 100 நாள் வேலை திட்டம் நடப்பதாக தெரிவித்து முறையான அனுமதி பெறாமல் தனியார் விவசாய நிலத்தில் வேலை பார்க்க வைத்த ஊராட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கௌரி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவிக்கும்போது, நாடு முழுவதும் 12 கோடி பேரும், தமிழகத்தில் 12.63 லட்சம் பேரும் 100 நாள் வேலை திட்ட பணியில் பணியாற்றி வருகிறார்கள். பணியாளர்களின் வருகை பதிவேடு NNMS செயலில் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திட்டப் பணிகள் தொடங்குவதும், முடிவுறுவதும் அந்த செயலியில் பதிவு செய்யப்படுகின்றது.

அதன் பேரில் 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் கண்காணிக்கப்படுகின்றது. 100 நாள் வேலை திட்ட பணிகளுக்கான சலவை விட ஜிபிஎஸ் கருவியில் கண்காணித்தால் அதிக செலவினம் ஏற்படும் என்பதால் 100 நாள் வேலை திட்டப் பணிகளை ஜிபிஎஸ் கருவி மூலமாக கண்காணிக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆகவே நீதிபதிகள் கிராமங்களில் நடைபெறும் 100 நாள் வேலை திட்டப் பணியில் நெடிமுறைகளை தடுக்கவும் முறைகேட்டில் ஈடுபடும் உள்ளாட்சி அமைப்பினர், அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள்.

Next Post

எனக்கு நானே இலக்கு வைத்துக் கொண்டேன்……! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி……!

Tue Feb 28 , 2023
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஏற்றமிகு ஏழு திட்டங்களின் கீழ் புதிய திட்டங்களை தமிழகம் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம், திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்வு, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம், பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி […]

You May Like