வங்கி கணக்கை முடக்கி 17 லட்சத்தை அபேஸ் செய்த நைஜீரிய கொள்ளையர்கள்…..! பெங்களூருவில் அதிரடி கைது சென்னை போலீசார் நடவடிக்கை….!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் டைல்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் ஒன்று வழங்கப்பட்டது. அந்த புகாரில் எங்களுடைய நிறுவன வங்கி கணக்கோடு இணைக்கப்பட்டிருந்த செல்போன் எண் நடக்கப்பட்டு வாங்கி கணக்கில் இருந்து 17 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணத்தை சைபர் கொள்ளையர்கள் திருடிவிட்டனர். ஆகவே எங்களுடைய பணத்தை மீட்டு அதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் கீழ் உள்ள சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் வினோத்குமார் தலைமை தனிப்படை அமைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில், டைல்ஸ் நிறுவன வாங்கி தகவல்கள் பெங்களூருவில் இருந்து சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதும், அதன் பிறகு வங்கி கணக்கு போது தொடர்புள்ள செல்போன் எண்ணை முடக்கி அதே செல்போன் எண்ணின் புதிய சிம் கார்டை வாங்கி இருப்பதும், வாங்கி பரிவர்த்தனையின்போது பெறப்படும் ஓடிபி எண்களை புது சிம்கார்டு நம்பரில் பெற்று பணத்தை திருடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆய்வாளர் வினோத்குமார் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பெங்களூருக்கு சென்று அங்கே பதுங்கி இருந்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 3 குற்றவாளிகளையும் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

அதன் பிறகு அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 மடிக்கணினிகள், 9 செல்போன்கள், 14 சிம் கார்டுகள், 12 டெபிட் கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

சேலம்| நூல் வியாபாரியின் வீட்டில் 50 பவுன் நகைகள் கொள்ளை…..! காவல்துறையினர் தீவிர விசாரணை….!

Fri Jun 2 , 2023
சேலம் மறவனேரி 7வது குறுக்குத் தெருவில் இருக்கின்ற சின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த நூல் வியாபாரி திருநாவுக்கரசு(66) இவருடைய மனைவி மல்லிகா(62) இந்த தம்பதிகளுக்கு 3 மகன்கள் இருக்கின்றனர். மூவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு சூரமங்கலத்தில் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தம்பதிகள் இருவரும் வீடு திரும்பினர். மல்லிகா அணிந்திருந்த நகைகளை கழற்றி அருகே இருந்த கண்ணாடி நேசையின் மீது […]

You May Like