பட்ஜெட் 2024: இடைக்கால பட்ஜெட் எதிரொலி..!! பங்குச்சந்தையில் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி.!

2024-25 ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில், இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொது தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த வருடத்திற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் ஆக தாக்கல் செய்யப்பட உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்ட தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் பாராளுமன்றத்தில் நேற்று தொடங்கியது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கிறார். பொதுத்தேர்தல் வர இருப்பதால் பட்ஜெட்டில் விவசாயிகள் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பல சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொழில் துறை மற்றும் வர்த்தகங்களுக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சலுகைகள் அறிவிக்கப்படலாம்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் பங்குச்சந்தையில் முன்னேற்றம் நிலவுகிறது. இன்று பட்ஜெட் தாக்கல் முன்னிட்டு பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் 76.55 புள்ளிகள் உயர்ந்து 71,828.66 ஆக இருந்தது. மேலும் தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 19.80 புள்ளிகள் அதிகரித்து 21,745.50 ஆக உயர்ந்திருக்கிறது. முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை பங்கேற்பாளர்கள், பட்ஜெட் கூட்டத்தொடரின் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் நிகழ்வுகள் பங்குச்சந்தையின் வர்த்தகத்தில் நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

பழனி முருகன் கோவில் விவகாரம்: "தமிழக அரசின் நிலைப்பாடு என்ன.?.." அமைச்சர் சேகர்பாபு விளக்கம்.!

Thu Feb 1 , 2024
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் மட்டுமல்லாது பிற மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை மாற்று மதத்தவர்கள் மற்றும் நாத்திகர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல தடை விதித்து தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தீர்ப்பு வெளியிட்ட நீதிபதி ஸ்ரீமதி ” மாற்று மதத்தவர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கோவிலின் […]

You May Like