நோட்…! இனி காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை… சென்னையில் மாற்றம்…! தவறி கூட போகாதீங்க…

traffic bike 2025

போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பீக் ஹவர்களில் தாம்பரம் பகுதியில் கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்தது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்; பொதுமக்களின் பாதுகாப்பையும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதையும் கருத்தில் கொண்டு, இன்று காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை கீழ்க்கண்ட சாலைகளில் கனரக வாகனங்கள் (Heavy Vehicles) செல்வதர்க்கு, தாம்பரம் மாநகர காவல்துறை போக்குவரத்து மாற்றங்களை அறிவித்துள்ளன.

ஜி.எஸ்.டி. சாலை தாம்பரம், குரோம்பேட், பல்லாவரம் – பம்மல் குன்றத்தூர் சாலை திருநீர்மலை சாலை 200 அடி ரேடியல் ரோடு (200-ft Radial Road) -தாம்பரம் வேளச்சேரி சாலை மற்றும் காந்தி ரோடு முடிச்சூர் சாலை. இந்த தடை (Peak Hours) நேரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

குன்றத்தூரிலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் – அனகாபுத்தூர் பைப்பாஸ் சர்வீஸ் சாலை அருகே எரிக்கரை சந்திப்பு மற்றும் திருநீர்மலை சாலை எரிக்கரை சாலை சந்திப்பில் இருந்து மதுரவாயல் பைப்பாஸ் சர்வீஸ் சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓரகடத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் – முடிச்சூர் சாலை மற்றும வெளிச்சுற்றுச் சாலை (Outer ring road) சந்திப்பில் இருந்து வெளிச்சுற்றுச்சாலை நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் முடிச்சூர் சாலை மற்றும் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring road) சந்திப்பிலிருந்து வெளிச்சுற்றுச்சாலை வழியாக செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் கனரக வாகனங்கள் தாம்பரம் fly over (Southern Side) பழைய சோதனைச்சாவடி வாயில் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பு, தாம்பரம் fly over மேல் பகுதியிலிருந்து மேடவாக்கம் மார்க்கமாக வேளச்சேரி நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கனரக மதுரவாயலிலிருந்து சென்னை நோக்கிவரும் வாகனங்கள் – மதுரவாயல் பைப்பாஸ் ஆம்புலன்ஸ் பாயிண்ட் மற்றும் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பை தொடர்ந்து, இரும்புலியூர் சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் நோக்கி செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டிலிருந்து சென்னை நோக்கிவரும் கனரக வாகனங்கள் சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கியும், வண்டலூர் வெளிச்சுற்றுச்சாலை (Outer ring Road) வழியாக படப்பை நோக்கியும், வண்டலூர் பழைய பாலம் வழியாக வாலஜாபாத் சாலை நோக்கியும் செல்ல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் சீரான போக்குவரத்திற்காக, OMR மற்றும் ECR சாலைகளைப் பயன்படுத்தி, தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: வெள்ளையனே வெளியேறு இயக்கம்!. மகாத்மா காந்தி கூறிய அந்த வார்த்தை!. பரபரப்பான தமிழ்நாடு!. இந்திய சுதந்திரத்திற்கு எவ்வாறு உதவியது?.

Vignesh

Next Post

இந்த நாட்டில் இன்று வரை இன்ஸ்டாகிராம் இல்லை, யூடியூப் இல்லை, இண்டர்நெட் இல்லை, ஏடிஎம் இல்லை.. உலகின் தனித்துவமான நாடு..!

Sat Aug 9 , 2025
இன்றைய அதி நவீன டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நம் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எங்காவது செல்ல வேண்டியிருக்கும் போது அல்லது எதை பற்றியாவது தெரிந்து கொள்ள வேண்டுமெனில் உடனடியாக கூகுளை நாடுகிறோம். நமது ஸ்மார்ட்போன்களில் நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பயன்பாடுகள் இணைய வசதியை அடிப்படையாகக் கொண்டவை. இந்தியா மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான நாடுகள் இண்டர்நெட்டை பயன்படுத்துகிறது. உலகம் முழுவதும் இண்டர்நெட் பயன்பாட்டில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. […]
1813Eritrea2703

You May Like