நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரத்தில் சோகம்!. 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி!.

noodles 5 dead 30kb

உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில், கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஃபுட் பாய்சன் காரணமாக இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிரேட்டர் நொய்டா அருகே உள்ள ரபுபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நகலா ஸ்ரீ பதம் கிராமத்தில்தான் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் மகேஷ் (37), அவரது மனைவி லலிதா (35) மற்றும் இவர்களின் குழந்தைகளான லட்டு (11), மிஷ்டி (7), சக்ஷாத் (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை இன்று காலை இவர்களின் வீட்டில் யாரும் வெளியே வராததை அடுத்து, சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையினரும், உயர் அதிகாரிகளும், அவசர ஊர்தியும் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையின்படி, நேற்று இரவு அந்தக்குடும்பம் நூடுல்ஸ் சாப்பிட்டதாக அக்கம் பக்கத்தினரும், மகேஷின் தாயாரும் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நூடுல்ஸ் சாப்பிட்டதுதான் மரணத்திற்குக் காரணமா என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் அறிவியல் ஆய்வுக் குழுவினர் வீட்டிலிருந்த தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிரேட்டர் நொய்டா துணை ஆணையர் (DCP) ஷிரவன் குமார் சிங் கூறுகையில், “ரபுபுரா பகுதியில் கணவன், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரவு 10 மணியளவில் உணவு உட்கொண்டுவிட்டு அவர்கள் தூங்கச் சென்றுள்ளனர். தடயவியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். அதுவரை தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்றார்.

உணவுப் பாதுகாப்புத் துறையினரும் களமிறங்கி விசாரணை நடத்தி வருவதால், அப்பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

குழந்தைகளின் இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வயது வரம்பு கிடையாது!. 'பெற்றோர் கண்காணிப்பு தான் தீர்வு'!. உச்சநீதிமன்றம் அதிரடி!

Sat Oct 17 , 2026
குழந்தைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன்படி, சிறுவர்கள் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு வயது அடிப்படையில் முழுமையான தடை விதிக்க முடியாது என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 21 மற்றும் பிரிவு 19(1)(a)-இன் கீழ் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இணையத்தைப் பயன்படுத்த உரிமை உள்ளது போல, வயது வித்தியாசமின்றி குழந்தைகளுக்கும் அதே […]
Internet child SC 30kb

You May Like