தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட முதலமைச்சர் ஜோசப் விஜய், 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.. எனினும் அவர் 2 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக அவர் தொடர முடியாது என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.. அவருடைய ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், கடந்த 10-ம் தேதி முதல் திருச்சி கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது..
பொதுவாக ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதத்திற்குள் சட்டப்பேரவை தேர்தல் நடத்தியாக வேண்டும். அந்த வகையில் நவம்பர் மாதத்திற்குள் திருச்சி கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யிடம் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தோல்வியை தழுவி இருந்தார்.
எனவே அவரே மீண்டும் களம் காண்பாரா அல்லது கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. அதே நேரம் தவெக தரப்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிடலாம் என்றும் கூறப்படுகிறது..



