TRAI: சிம் பயன்பாடு குறித்த பரிந்துரைகளை வெளியிட்ட டிராய்…!

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) ‘மெஷின்-டு-மெஷின் (எம் 2 எம்) தகவல் தொடர்புகளுக்கான சிம் பயன்பாடு’ குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

தொலைத் தொடர்புத் துறை, 09.11.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம், எம்2எம் சிம் பயன்பாடு குறித்து டிராய் சட்டம், 1997 இன் கீழ் பரிந்துரைகளைக் கோரியது. இது தொடர்பாக, பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் / எதிர் கருத்துகளைக் கோருவதற்காக 25.07.2022 அன்று ‘எம்2எம் கம்யூனிகேஷன்களுக்கான உட்பொதிக்கப்பட்ட சிம்’ குறித்த ஆலோசனை அறிக்கையை டிராய் வெளியிட்டது. இதற்கு பதிலளித்த 15 பங்குதாரர்கள் தங்கள் கருத்துக்களை சமர்ப்பித்தனர்.

ஆலோசனை அறிக்கை மீதான திறந்த விவாதம் 14.12.2022 அன்று மெய்நிகர் முறையில் நடைபெற்றது. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் / உள்ளீடுகள், இந்த விஷயத்தில் விரிவான விவாதங்கள் மற்றும் அதன் சொந்த பகுப்பாய்வின் அடிப்படையில், டிராய் தனது பரிந்துரைகளை இறுதி செய்துள்ளது.

Vignesh

Next Post

Onion: 5 லட்சம் டன் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவு...!

Wed Mar 27 , 2024
நடப்பு ஆண்டில், ரபி பருவ அறுவடை சந்தைக்கு வரத் தொடங்கி உள்ள நிலையில், கூடுதல் கையிருப்புத் தேவைக்காக 5 லட்சம் டன் வெங்காயத்தை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யத் தொடங்குமாறு தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பான NCCF மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED ஆகிய நிறுவனங்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. நேரடி பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் மாற்றப்படுவதை உறுதி செய்ய NAFED மற்றும் […]

You May Like