அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அதை 150 அல்லது 250 சதவீதமாக அதிகரிப்போம். மருந்துகள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புவதால் இதைச் செய்வோம்’ என்று டிரம்ப் கூறினார். அதாவது செமிகண்டக்டர் முதல் மருந்து பொருட்கள் வரை அனைத்துக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்றும், இதில் பார்மாவுக்கான வரி விகிதம் 250 சதவிகிதம் வரை உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள மருந்துத் துறையின் மீது அழுத்தம் அதிகரித்து வரும் நேரத்தில், நிறுவனங்கள் அமெரிக்காவிலேயே மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என்று டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முக்கிய மருந்து சப்ளையர்களிடமிருந்து விலைகளில் பெரும் குறைப்பை அவர் சமீபத்தில் கோரியுள்ளார், இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். இருப்பினும், மருந்துகளுக்கான ஆரம்ப வரி விகிதம் என்னவாக இருக்கும் என்று அவர் கூறவில்லை.
மே 2025 இல், அமெரிக்காவில் மருந்துகளின் விலை மற்ற வளர்ந்த நாடுகளை விட மூன்று மடங்கு அதிகம் என்று வெள்ளை மாளிகை கூறியது. ஏப்ரல் மாதத்தில் கிட்டத்தட்ட அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கும் 10 சதவீத வரி விதித்ததிலிருந்து, டிரம்ப் வெவ்வேறு நாடுகளின் தயாரிப்புகளுக்கு வெவ்வேறு விகிதங்களில் வரிகளை விதித்துள்ளார்.
Readmore: இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கு காஷ்மீர் பிரச்சினையே முக்கிய காரணம்!. ஷெபாஸ் ஷெரீப் விமர்சனம்!