சற்று முன்…! வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்….!

tvk vijay ec

தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியை 36 லட்ச வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி வாக்காளர் பட்டியலில் சரி பார்க்க முடியும்..? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.


வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் என சந்தேகப்படுகிறோம். பீகாரில் இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டினார்.

இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும். இது தமிழ்நாட்டுக்கான பிரச்னை ஆகும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் 4 தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. மத சார்பற்ற கூட்டணி சார்பில் நடத்தப்படும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாட்டில் உள்ள 60 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கூட்டத்தை நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதல் கட்ட சிறப்பு வாக்காளர் திருத்தம் குறித்து தெளிவான விளக்கம் இல்லாத நிலையில் இரண்டாவது கட்டம் ஏன்? “மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை கேள்விக்கு உள்ளாக்கியது சிறப்பு தீவிரம் வாக்காளர் திருத்தம். தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடியை 36 லட்ச வாக்காளர்கள் இருக்கிறார்கள் இவர்கள் அனைவரின் பெயரையும் வெறும் 30 நாட்களில் எப்படி சரி பார்க்க முடியும்? நம் மண்ணின், மக்களின் உரிமைக்காக அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது.

அதேபோல் அரசியல் லாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் திமுகவின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம். தொகுதிமறு வரையறையை எதிர்க்கும் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டோம். ஆனால் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கான நோக்கத்தையும், பின்னணியும் மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், திமுக அரசு மீது வரிசை கட்டி வரும் ஊழல் புகார்களில் இருந்து மக்களை திசை திருப்பும் கபட நாடக அரசியலே ஆகும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இந்திய ரயில்வே 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்.. ஆரம்பமே 34,000 சம்பளம்..!! செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

Sun Nov 2 , 2025
A total of 2,569 vacancies have been announced in Indian Railways.
railway 2025

You May Like