தூள்..! இன்று காலை 9 முதல் மாலை 3 மணி வரை உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…!

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-22ல் தேவராஜன் தெருவில் உள்ள சமுதாயக் கூடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-29ல் இராமலிங்க காலனி சி பிளாக் பிரதான சாலை, வாழைத்தோப்பு அருகிலுள்ள நியாய விலைக்கடை, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-59ல், பார்க் டவுன், ஏகாம்பரேஸ்வர அக்ரஹாரம் தெருவில் உள்ள ஶ்ரீமகேஸ்வரி சபா, திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-75ல், தலைமைச் செயலக காலனி 3வது தெருவில் உள்ள தலைமைச் செயலக மெட்ரிக் பள்ளி அருகில் நடைபெற உள்ளது.


மேலும் அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-103ல் அண்ணாநகர் 7வது பிரதான சாலையில் உள்ள உடற்பயிற்சிக் கூடம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-121ல் மயிலாப்பூர், இராயப்பேட்டை பிரதான சாலை, ரங்கையா கார்டனில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. இளம் ஆண்கள் இந்திய சங்கம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-134ல் அசோக் நகர், பக்தவச்சலம் தெருவில் உள்ள விளையாட்டுத் திடல், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல், ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-161ல் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிதி திருமண மண்டபம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-178ல், தரமணி, சி.எஸ்.ஐ.ஆர். சாலையில் உள்ள 5சி பேருந்து நிலையம் ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Vignesh

Next Post

தமிழகமே…! இன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோடக்கன்..! அரசு அசத்தல் அறிவிப்பு…!

Thu Aug 28 , 2025
சுபமுகூர்த்த தினமான இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் […]
Registration Department

You May Like