வானதி சீனிவாசனுக்கு ஐசியூவில் சிகிச்சை.. மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கை..!

vanathi srinivasan

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த 4 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இந்த சூழலில் நேற்று காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வானதி சீனிவாசன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 48 மணி நேரம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவரின் தேர்தல் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை நிர்வாகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.. அதில் “ வானதி சீனிவாசன் காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அவருக்கு ஆண்டி பயாடிக் மருந்துகள் பிற ஆதரவு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.. 2 நாட்கள் படுக்கை ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருந்து காரணமாக ஏற்பட்ட சிறு ஒவ்வாமையால் ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.. தற்போது வானதி சீனிவாசன் உடல்நிலை சீராக உள்ளது. பேசக்கூடிய நிலையில் நலமாக உள்ளார்.. அவரின் உடல்நிலை முழுமையாக குணமடைய 4 நாட்களாகும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “ஜோசப் விஜய் முதலில் நல்ல கணவனாக, குடும்பஸ்தனாக இருக்க வேண்டும்..” மீண்டும் விளாசிய நயினார்..!

RUPA

Next Post

UPI மூலம் தவறுதலாக வேறு ஒருவருக்குப் பணம் அனுப்பிவிட்டீர்களா? இதை செய்தால் பணம் திரும்ப வந்துவிடும்..!

Sun Apr 12 , 2026
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் UPI செயலிகள் உள்ளன.. சில தொலைபேசிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. UPI வசதி கிடைத்த பிறகு, பலர் தங்கள் பணப்பையில் பணம் வைப்பதை நிறுத்திவிட்டனர். ஸ்கேனர்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதால், தொலைபேசிகள் மூலம் எளிதாகப் பணம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் UPI ஐடி தவறாக இருப்பது, தட்டச்சுப் பிழைகள், ஒரு தொடர்பு எண்ணுக்குப் பதிலாக மற்றொரு எண்ணைத் தேர்ந்தெடுப்பது போன்ற […]
upi payment to wrong account

You May Like