தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (35). டிரைவராக வேலை செய்து வந்தார். அவரின் மனைவி மவுனிகா (30). இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். ஆனால், கடந்த 9 மாதங்களாக மவுனிகா பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அஜய் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.
தனது கள்ளக்காதலனுக்கு கணவன் இடையூறாக இருப்பதால் அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் மவுனிகா. இதற்காக மெடிக்கல் ஷாப் வைத்துள்ள சிவகிருஷ்ணாவை தொடர்பு கொண்டார். மவுனிகாவுடன் ஸ்ரீஜா, சந்தியா என்ற பாலியல் தொழிலாளிகளும் சேர்ந்து கொலை திட்டம் தீட்டினர். முதலில், “வயாகரா” மாத்திரையை மட்டன் குழம்பில் கலந்து சுரேஷுக்கு கொடுத்தார். ஆனால், சுரேஷ் அதை சாப்பிடவில்லை.
இதில் ஏமாற்றமடைந்த மவுனிகா அடுத்த முயற்சியாக BP மாத்திரை மற்றும் தூக்க மாத்திரை பொடி செய்து மதுபானத்தில் கலந்து சுரேஷுக்கு கொடுத்தார். மதுவை குடித்த சுரேஷ் சில நிமிடங்களில் மயங்கி விழுந்தார். பிறகு தன்னை குற்றமற்றவளாக காட்ட சுரேஷின் தாய்க்கு கால் செய்து “நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி நாடகம் அறங்கேற்றியுள்ளார்.
மவுனிகா நடத்தையில் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை தொடங்கியபோது, மவுனிகாவின் கள்ளக்காதல் ரகசியம் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து கொலையில் சம்பந்தப்பட்ட ஆறு பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
Read more: இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..! அதி கனமழை கொட்டி தீர்க்குமாம்.. கவனம்..!



