“நெருக்கடி காலத்தில் விட்டு செல்வர்கள் நாங்கள் இல்லை..” ஸ்டாலினுக்கு அகிலேஷ் யாதவ் முழு ஆதரவு..!

akilesh stalin rahul

தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அதிக இடங்களை பெற்ற விஜய்யால் ஆட்சியமைக்க முடியவில்லை.. இந்த சூழலில் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதாவு அளித்தது.. இதன் மூலம் திமுக உடனான நீண்டகால உறவை காங்கிரஸ் முறித்துக் கொண்டது..


திமுக வெற்றி பெற்ற போதெல்லாம் உடனிருந்த காங்கிரஸ், இப்போது தோல்வியை தழுவிய உடன் கூட்டணியில் இருந்து வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியது.. காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக திமுகவினர் விமர்சித்து வருகின்றனர்.. நேற்று ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இந்த நிலையில் சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் உ.பி முதல்வரும் அகிலேஷ் யாதவ் திமுகவுக்கு ஆதரவாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். நெருக்கடி காலத்தில் உங்களை கைவிடும் ஆட்கள் நாங்கள் அல்ல.. என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்..

RUPA

Next Post

தவெகவின் 107 MLA-க்கள் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்..? குடியரசுத் தலைவர் ஆட்சி..? இடைத்தேர்தல்..?

Fri May 8 , 2026
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வருவதால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.. விஜய்யின் தவெக, 108 இடங்களை தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், போதிய பெரும்பான்மை இல்லாததால் அவரால் ஆட்சியமைக்க முடியவில்லை.. காங்கிரஸ் ஆதரவு வழங்கியதால் தவெகவின் பலம் 113ஆக உயர்ந்துள்ளது.. எனினும் மேலும் 5 இடங்கள் தேவை.. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ள நிலையில், அக்கட்சிக்கு மேலும் 5 இடங்கள் தேவைப்படுகிறது.. விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கள் […]
vijay tvk 3

You May Like