“இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம்.. இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள்..” ஸ்டாலின் பரபரப்பு பதிவு..!

stalin dmk n

எ.வ வேலுவுக்கு சொந்தமான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சமாட்டோம் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் அமைச்சர் எ.வ வேலுக்கு சொந்தமான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த சோதனைக்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ” திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் – முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.

அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு. ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!” என்று தெரிவித்துள்ளார்.

Read More : பாஸ்போர்ட், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இல்லையெனில், இந்தியக் குடியுரிமைக்கான சான்றாக எது அமையும்..?

English Summary

M.K. Stalin has stated that they will not be intimidated by threats from the ruling party, even as the Directorate of Vigilance and Anti-Corruption conducts raids on premises belonging to E.V. Velu.

RUPA

Next Post

புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் CM விஜய்..! வீடியோ எடுத்துக் கொண்டே பேருந்தில் பயணம்..!

Thu Jun 25 , 2026
Chief Minister Vijay flagged off the service of 300 new buses on behalf of the Tamil Nadu State Transport Corporation today.
cm vijay 2

You May Like