ஈரானில் சிறைபிடிக்கப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் சரக்கு கப்பல்.. கப்பலில் இருந்த 16 இந்தியர்கள் நிலைமை என்ன? – MEA புதிய தகவல்!

இஸ்ரேலுடன் இணைக்கப்பட்ட கொள்கலன் கப்பலை ஈரான் ராணுவம் கைப்பற்றி இரண்டு வாரம் ஆகியது. இந்நிலையில் மீதமுள்ள 16 இந்தியர்கள் நாடு திரும்புவதில் சில தொழில்நுட்ப சிக்கல் இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்துள்ள ஈரான் நாட்டின் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் இஸ்லாமிய புரட்சி படையை சேர்ந்த 3 முக்கிய அதிகாரிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளையும், 30-க்கும் கூடுதலான தரைவழி தாக்குதல் நடத்த கூடிய ஏவுகணைகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை கொண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 

இதையடுத்து இஸ்ரேலுடன் சம்பந்தப்பட்ட எம்.எஸ்.சி. ஏரீஸ் என்ற சரக்கு கப்பலை கடந்த 13-ந் தேதி சிறைபிடித்தது. ஓமன் வளைகுடா அகில் ஹார்முஸ் ஜலசந்தியையொட்டிய பகுதியில் வைத்து ஈரான் இஸ்லாமிய புரட்சி காவல் படையால் கப்பல் சிறை பிடிக்கப்பட்டது. அந்த சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் உள்பட 25 மாலுமிகள் சிக்கிக்கொண்டனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சரக்கு கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த பெண் பணியாளர் தாயகம் திரும்பினார். மீதமுள்ள 16 இந்தியர்களை தாயகம் கொண்டு வர இந்திய வெளியுறவுத் துறை தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறது. இந்நிலையில், MEA செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது, “கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 16 இந்தியர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். அவர்கள் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களை சந்திப்பதற்கு ஈரானிய அதிகாரிகளால் இந்திய தூதரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் சிக்கிய 16 இந்தியர்களை சந்தித்தனர். அவர்களின் உடல்நிலை நன்றாக உள்ளது. மேலும் அவர்களுக்கு கப்பலில் எந்த வித பிரச்சனையும் இல்லை. அவர்கள் திரும்புவதைப் பொறுத்த வரையில், அதில் சில தொழில்நுட்பங்கள் உள்ளன, சில ஒப்பந்தக் கடமைகள் உள்ளன, அது முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்புவார்கள்” எனத் தெரிவித்தார்.

ஏப்ரல் 1 ம் தேதி டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வகையில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவுவதன் மூலம் ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது தனது முதல் நேரடி தாக்குதலை நடத்தியது. அதன் எதிர்வினையாக, நிலைமையை உடனடியாக தணிக்க இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

Next Post

’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’..!! இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!! - வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Fri Apr 26 , 2024
தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்களில் மே 1ஆம் தேதி முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். மாநிலத்தில் 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அளவு பதிவாகக் கூடும் என்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மே 5ஆம் தேதி முதல் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு […]

You May Like