தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், என்ன நடக்கும்..? விஜய்க்கு இருக்கும் வாய்ப்புகள் என்னென்ன..?

vijay tvk 1

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.. இதன் மூலம் 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கபப்ட்டுள்ளது.. முதல் தேர்தலிலேயே வெற்றி வாகை சூடிய தவெக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளது.


ஆனாலும் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தவெகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.. அதாவது, மொத்தம் உள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க முடியும்.. ஆனால் தவெக 108 தொகுதிகளில் தான் முன்னிலை வகிக்கிறது. எனவே தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அடுத்தது தொங்கு சட்டசபை அமையும் என்று கூறப்படுகிறது..

விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.. இதில் ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும்.. அப்படி செய்யும் போது தவெக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்..

மேலும் தவெகவில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும்.. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால் மேலும் ஒரு இடம் குறையும்.. எனவே, தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.. தற்போதைய சூழலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் வீதம் 4 இடங்களும், தேமுதிகவுக்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விசிகவுக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன..

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும், அமமுகவுக்கு 1 இடமும் கிடைத்துள்ளது.. திமுக, அதிமுக இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் 12 உறுப்பினர்களின் ஆதரவுக்கு கிடைத்தால் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்கும்..

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் இன்று சென்னை வருகிறார்.. அவர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்..

அவர் தவெகவுக்கு 2 வாய்ப்புகளை வழங்குவார்.. ஒன்று, தவெக தலைவர் விஜய்யை அழைத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கூறுவார்.. அல்லது தனக்கு ஆதரவு தரும் கட்சிகளிடம் இருந்து கடிதங்களை பெற்று அதனை தன்னிடம் வழங்கும்படி கூறுவார்.. 118 இடங்களுக்கு மேல் ஆதரவு கிடைத்தால் தவெகவுக்கு ஆட்சி அமைக்கும் உரிமையை கவர்னர் வழங்குவார்.

அவ்வாறு ஆதரவு கிடைக்காமல் போனால் தவெகவுக்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காமல் போகும்.. அது போன்ற நிலை உருவானால், இரண்டாவதாக அதிக இடங்களை பெற்றுள்ள திமுகவை ஆட்சி அமைக்க கவர்னர் கோருவார்.. அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியாமல் போனால், அடுத்த 6 மாதங்கள் தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெறும்.. பின்னர் சட்டசபை தேர்தல் 234 தொகுதிகளுக்கும் மீண்டும் நடைபெறும்..

Read More : 108 தொகுதிகளில் வெற்றி.. விடிந்ததும் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய விஜய்..! அடுத்த நகர்வு என்ன..?

RUPA

Next Post

கவனம் ஈர்க்கும் த.வெ.க. தேர்தல் அறிக்கை.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..?

Tue May 5 , 2026
TVK's election manifesto attracts attention.. What are the main promises..?
TVK Vijay 2025

You May Like