திமுக தோல்விக்கு என்ன காரணம்..? மு.க. ஸ்டாலினுக்கு போன ரிப்போர்ட்.. கள ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

dmk office stalin

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது… இதையடுத்து தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பல கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டார்.. மேலும் தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு 32 பேர் கொண்ட குழுவையும் அமைத்தார்.. இந்த குழு தமிழக முழுவதும் கள ஆய்வு செய்து தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்..


அதன்படி இந்த குழுவினர் தமிழகம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில் இந்த குழுவில் ஒரு பிரிவினர் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்..

இந்த நிலையில் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின.. அதில் கூட்டுறவு சங்கம், ஆவின் உள்ளிட்ட தேர்தல்களை நடத்ததாதால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது… மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்களே முட்டுக்கட்டை என புகார் உள்ளது.. பல முறை காத்திருந்தும் அமைச்சர்களை பார்க்க முடியாமல் திரும்பி சென்றதாகவும் கட்சி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்..

களத்தில் திமுக அரசு – திமுக கட்சி என இரண்டாக பிரிந்து நின்றதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்கும் திட்டங்களுக்கு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.. அதிகாரிகள் அவர்களாகவே திட்டங்களை முடிவு செய்ததாகவும் கள ஆய்வில் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.. கட்சியில் உள்ள இளைஞர்களின் சக்தியை முழுமையாக பயன்படுத்தவில்லை என அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்குமுன்னுரிமை வழங்கப்படவில்லை. கட்சி பொறுப்புகளில் இல்லாத மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.. ஒப்பந்தங்கள் பெரும்பான்மையாக திமுகவினருக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் கள ஆய்வில் பலர் புகார் தெரிவித்தனர்..

RUPA

Next Post

எல் நினோ ஒரு அச்சுறுத்தல்.. நீரைச் சேமியுங்கள்.. மாநிலங்களுக்குப் பிரதமர் மோடி எச்சரிக்கை!

Fri Jun 12 , 2026
காலநிலை மாற்றம் மற்றும் ‘எல் நினோ’ (El Niño) நிகழ்வின் விளைவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை எச்சரித்துள்ளார். நிதி ஆயோக்கின் (NITI Aayog) 11-வது நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் அனைத்து மாநிலங்களும் நீர் சேமிப்பிற்கு முன்னுரிமை அளிக்குமாறும், வரவிருக்கும் காலநிலை சவால்களை எதிர்கொள்ள முன்கூட்டியே திட்டங்களை வகுக்குமாறும் அறிவுறுத்தினார். 28 மாநிலங்கள் மற்றும் ஐந்து யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், […]
pm modi in niti aayog governing council meeting 1

You May Like