டெல்லி மாநகர பகுதியில் பாண்டவ நகரில் அஞ்சன்தாஸ் என்பவர் தனது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். கணவர் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், மனைவி அவரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் திருந்தவில்லை.
இந்த நிலையில் கோபமடைந்த பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் கணவரை கொலை செய்துவிட்டு மகனின் உதவியோடு கணவரின் உடலை 22 துண்டுகளாக வெட்டியுள்ளார்.
இவ்வாறு வெட்டப்பட்ட உடலின் பாகங்களை பிரிட்ஜில் வைத்து கொண்டு தினமும் ஒன்றொன்றாக டெல்லியை சுற்றிலும் பல பகுதிகளில் வீசியுள்ளார். பையில் வைத்து கொண்டு உடல் பாகங்களை எடுத்து செல்வது வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து சென்ற ஜூன் மாதத்தில் தாசின் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.சமீபத்தில் ஷ்ரத்தா கொலை வழக்கின் தொடர்பாக உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.
அப்போது கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களில் சிலது தாசின் உடல் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து மகன் மற்றும் மனைவியை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.