ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் கைப்பா பகுதிக்கு அருகே, உடல் ஒன்று பாதி எரிந்த நிலையில் கிடப்பதாகக் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற நந்திவர்க்கம் காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் இறந்தவர், ஆந்திர மாநிலம் டோன் நகரைச் சேர்ந்த வில்சன் என்பது உறுதி செய்யப்பட்டது. 11 வருஷங்களுக்கு முன்பு வில்சனுக்கு மேரி என்பவருடன் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். மேரி ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது, மது என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இந்த விவகாரம் வில்சனுக்கு தெரியவரவே, அவர் மனைவி மேரியை கண்டித்துள்ளார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனை தீர்த்துக்கட்ட மேரி முடிவு செய்தார். இதற்காக தனது கள்ளக் காதலன் மதுவுடன் சேர்ந்து கொலைத் திட்டத்தைத் தீட்டினார். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற மது தன்னுடைய நண்பர்களான ரபி மற்றும் அசோக் ஆகியோரை சேர்த்துக் கொண்டார்.
சம்பவத்தன்று, ரபியும் அசோக்கும் வில்சனுக்கு போனை போட்டு, மது அருந்த வருமாறு அழைத்துள்ளனர். சூழ்ச்சி என அறியாத வில்சன், அவர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அந்த கும்பல், மறைத்து வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளனர். துடிதுடித்த வில்சன் அங்கேயே உயிர் இழந்தார். பிறகு உடலைச் சாக்குப்பையில் கட்டி எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இதையடுத்து மேரி, அவரது காதலன் மது மற்றும் நண்பர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Read more: தேநீர் அருந்தும்போது இந்த 5 தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்.. நன்மையை விடத் தீமையே அதிகம்..!



