சொத்திற்காக கணவனையே மருந்து கொடுத்து கொன்ற மனைவி..!

உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள கல்யாணப்பூர் சிவ்லியில் ரிஷப் என்பவர் தனது மனைவி சப்னா வசித்து வருகிறார். ரிஷப் கடந்த 27 ஆம் தேதி தனது நண்பருடன் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்று சென்றுள்ளார். அங்கே திடீரென எதிர்பாராமல் மர்மநபர்கள் சிலர் ரிஷப்பை கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த ரிஷப் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய பின்னர் அடுத்த இரண்டு நாட்களிலேயே மீண்டும் உடல்நிலையானது மோசமாகி உயிரிழந்துள்ளார். 

இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வந்துள்ளனர். விசாரணையில் ரிஷப் தாக்கப்பட்ட இடத்திலிருந்த செல்போன் ஒன்றின் சிக்னலை வைத்து கொலையாளியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

விசாரணையில், ரிஷப் மனைவியே சொத்திற்காக ஆசைப்பட்டு கணவனை கூலி ஆட்களை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் என்பதும், ஆனால் கணவர் அதிலிருந்து தப்பித்ததால் வீட்டிற்கு வந்த அவருக்கு அதிக மருந்துகளை கொடுத்து கொலை செய்ததும் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மனைவி மற்றும் அதற்கு துணை நின்ற நபர்களை கைது செய்துள்ளனர்.

Baskar

Next Post

#விழுப்புரம் : காதலித்த பெண்ணை ஏமாற்றிய இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை..!

Sat Dec 10 , 2022
புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள ஆண்டியார்பாளையத்தில் அசீன்பாஷாவின் மகன் அமீன்பாஷா என்பவர் (26) திருபுவனையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் விக்கிரவாண்டியை சேர்ந்த 23 வயது பெண்ணுடன் 2018ம் ஆண்டே பழக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் இருவருமே காதலித்து வந்துள்ளனர். இதனிடையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி பெண்ணிடம் நெருங்கிப் பழகியுள்ளார். இதனை தொடர்ந்து சில நாட்களில் தன்னைத் திருமணம் செய்து […]

You May Like