விடிய விடிய போனில் பேசிய மனைவி..!! நள்ளிரவில் புகுந்த கள்ளக்காதலன்..? சடலமாக மீட்கப்பட்ட கணவன்..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!!

Erode 2026 2

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் பிரசாந்த் (29). இவருக்கும் யுவராணி என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், யுவராணி பருவாச்சி பகுதியைச் சேர்ந்த சித்தேஸ்வரன் என்ற இளைஞருடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது.


இதனை அறிந்த வெங்கடேஷ் பிரசாந்த் மனைவியை கண்டித்ததால், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், விரக்தியடைந்த யுவராணி வீட்டில் இருந்த சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட கணவர் வெங்கடேஷ் பிரசாந்த், மனைவியைத் தடுத்து காப்பாற்றியுள்ளார்.

அதன் பின்னர், நள்ளிரவில் யுவராணியும் அவரது குழந்தையும் ஒரு அறையில் தூங்கச் சென்ற நிலையில், மற்றொரு அறையில் இருந்த வெங்கடேஷ் பிரசாந்த் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த அந்தியூர் காவல் துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தில், வெங்கடேஷ் பிரசாந்தின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் பகிரங்கப் புகார் அளித்துள்ளனர். மனைவியைத் தற்கொலையில் இருந்து காப்பாற்றிய நபர் திடீரென தூக்கிட்டு உயிரிழந்தது ஏன், இது உண்மையிலேயே தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் சதியால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் செல்போன் அழைப்பு விவரங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : தவெக வேட்பாளர்களை விரட்டியடிக்கும் மக்கள்..!! தேர்தல் கமிஷனை நாடும் அமைச்சர்கள்..!! சூடுபிடிக்கும் களம்..!!

Next Post

ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிர்ச்சி..!! தனது உதவியாளரை 13 வயதிலேயே சீரழித்த கொடூரம்..!! வளர்ந்த பின் புரோக்கர்..!!

Tue Sep 22 , 2026
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழை சிறுமிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய புகாரில், பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு வந்த 60 வயதான அவரது பெண் உதவியாளர் சாந்தி என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைதான சாந்தியிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் […]
Gem Veeramani 2026 1

You May Like