2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சி தலைவர்களின் சுற்றுப்பயணங்கள், வீடு தோறும் திண்ணை பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தைகள், பொது கூட்டங்கள் என்று இப்போதே தொடங்கிவிட்டன. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு என்று வியூகம் வகுத்து களத்தில் இறங்கிவிட்டனர்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனிடையே ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே எஸ் அழகிரி கூறியதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இது மறைமுகமாக தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் செல்வதற்கான சிக்னலாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்க இருக்க இது போன்ற கருத்துக்கள் வலுவடையும் என்றும் விஜய் உடன் காங்கிரஸ் நெருக்கமாக இருப்பதால் கடைசி நேரத்தில் கூட காங்கிரஸ் தவெக பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளதாவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை மாநாட்டிற்கு பிறகு அநேகமாக காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றி கழகம் கூட்டணி அமைவதற்கு 99% வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். அவ்வாறு அமைந்தால் விஜய் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என பெரிய கட்சிகள் பயத்தில் இருக்கிறார்களாம். இதனால் தர்ம சங்கடத்தில் இருக்கின்றனர் திமுக.